தலாய் லாமாவுக்கு சுவிட்சர்லாந்தில் உற்சாக வரவேற்பு
தலாய் லாமாவுக்கு சுவிட்சர்லாந்தில் உற்சாக வரவேற்பு
தலாய் லாமாவுக்கு சுவிட்சர்லாந்தில் உற்சாக வரவேற்பு 14 வது தலாய் லாமா சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ளார், அங்கு வெள்ளிக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
திபெத்திய பௌத்தர்களின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரை ஹில்டன் சூரிச் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் வரவேற்றனர்.
பலர் பாரம்பரிய திபெத்திய ஆடைகளை அணிந்து, ஹோட்டலுக்கான சாலையில் வரிசையாக மலர்கள், தூபக் குச்சிகள் மற்றும் திபெத்தியக் கொடிகளை வைத்திருந்தனர். தலாய் லாமா இரவு 7:15 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தபோது, கூட்டம் அமைதியாகி, அந்த தருணத்தை தங்கள் தொலைபேசிகளில் படம்பிடித்தது.
தலாய் லாமா திங்கள்கிழமை வரை சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, 89 வயதான அவர் சூரிச்சின் Hallenstadion ல் ஒரு நிகழ்வில் தோன்றுவார் எனவும் சொல்லப்படுகிறது. அங்கு அவர் காலை 9 மணிக்கு விழாவில் பங்கேற்பதோடு திபெத்திய மொழியில் ஒரு போதனை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த வருகை சுவிட்சர்லாந்தில் உள்ள திபெத்திய சமூகத்தினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
© KEYSTONE / ENNIO LEANZA