சுவிஸ் சாலையில் மனைவியுடன் வாக்கிங் சென்ற முகேஷ் அம்பானி! வைரலாகும் வீடியோ
சுவிஸ் சாலையில் மனைவியுடன் வாக்கிங் சென்ற முகேஷ் அம்பானி! வைரலாகும் வீடியோ
சுவிஸ் சாலையில் மனைவியுடன் வாக்கிங் சென்ற முகேஷ் அம்பானி! வைரலாகும் வீடியோ இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானியுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள சாலையில் வாக்கிங் சென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சாலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி வாக்கிங் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீடா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்தும் காணப்படுகின்றனர். குறிப்பாக இருவரும் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் சாலையில் தனியாக நடந்து செல்கிறார்கள்.
ஏற்கனவே, முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் தங்களது விடுமுறை காலத்தை கழித்தனர். அவர்கள் அங்கள்ள விலையுயர்ந்த விடுதியான ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் (opulent Bürgenstock Resort) தான் தங்குவர்.
இந்த விடுதியில் அதிகபட்சமாக ஒரு இரவுக்கு மட்டும் இந்திய மதிப்பில் ரூ.62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதியில் மொத்தம் நான்கு ஹோட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், பத்து உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளளமை குறிப்பிடத்தக்கது.