ரயிலில் மீது ஏறிய சுற்றுலா பயணி மின்சாரம் தாக்கி காயம்
ரயிலில் மீது ஏறிய சுற்றுலா பயணி மின்சாரம் தாக்கி காயம்
ரயிலில் மீது ஏறிய சுற்றுலா பயணி மின்சாரம் தாக்கி காயம் சுவிட்சர்லாந்தில், ரயில் தண்டவாளத்தின் அருகே யரோ ஒருவர் விழுந்துகிடப்பதைக் கவனித்த ரயில் சாரதி ஒருவர் அவசர அவசரமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.
புதன்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில், ரயில் சாரதி ஒருவர், ரயில் தண்டவாளத்தின் அருகே யாரோ ஒருவர் விழுந்துகிடப்பதைக் கவனித்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். விழுந்து கிடந்தது ஒரு 14 வயதுச் சிறுவன்!
அந்த ரயில் சாரதி உடனடியாக அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர் அந்தச் சிறுவனை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் சூரிச் பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நடந்தது என்ன என்பது பிறகுதான் தெரியவந்தது. அதாவது, சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த அந்தச் சிறுவன், காலை 7.00 மணியளவில் ஓடும் ரயிலின் கூரை மீது ஏறியுள்ளான்.
தலைக்கு மேல் 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்துசென்றுகொண்டிருக்க, தற்செயலாக அவனது கை மின்சார வயரில் பட, அவன் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான்.
அப்படி மின்சாரம் தாக்கி ரயில் தண்டவாளத்தின் அருகே விழுந்துகிடந்த அந்த சிறுவன், சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக ரயில் சாரதி ஒருவர் கண்ணில் பட, அவர் உடனே அவசர உதவியை அழைத்துள்ளார்.
அந்தச் சிறுவன் செக் குடியரசைச் சேர்ந்தவன் ஆவான், அவனது தற்போதைய நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.