Swiss Local NewsGeneva
ஜெனீவா விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டுப்பாடுகள்
ஜெனீவா விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டுப்பாடுகள்
ஜெனீவா விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டுப்பாடுகள் வரும் வாரங்களில் ஜெனீவா விமான நிலையத்திலிருந்து நீங்கள் பறக்கத் திட்டமிட்டால்இ பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிடத்தக்க பார்க்கிங் கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி, P51 கார் பார்க்கிங் கட்டம் கட்டமாக புதுப்பிக்கப்படும், இந்த பணிகள் சுமார் மூன்று மாதங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு தளங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கும் P1 கார் பார்க்கிங் அடுத்த ஆண்டுக்கு குறைந்த அளவிலான இடங்களையே கொண்டிருக்கும்
பயணிகள் மற்றும் பார்வையாளர்கள், விமான நிலையத்தின் ஸ்விஸ் மற்றும் பிரெஞ்ச் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் கிடைக்கக்கூடிய பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.