Swiss Local NewsZurich

சூரிச் கன்டோனில் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

சூரிச் கன்டோனில் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் கன்டோனின் வாகன இலக்கத் தகடு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் வாகன இலக்கத் தகடுகள் அல்லது வாகன உரிம தகடுகளில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுவரை காலமும் வாகன இலக்கத் தகடுகளில் ஆறு இலக்கங்கள் காணப்பட்டன. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் இந்த இலக்கங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிக்கப்பட உள்ளது.

நாட்டில் முதன்முறையாக இவ்வாறு வாகன இலக்கத் தகடுகளின் எண்கள் ஆறு இலக்கத்திலிருந்து ஏழு இலக்கமாக மாற்றப்படுகின்றது என்பதை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சில ஆண்டுகளில் வாகன இலக்கத் தகடுகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சூரிச் கன்டோனில்சூரிச் கன்டோனில் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

6 இலக்கத் தகடுகள் காரணமாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கில் வாகன இலக்க தகடுகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாகன இலக்க தகடுகளுக்கு நிலவிவரும் தட்டுப்பாடு காரணமாக இடைக்கால தீர்வாக சூரிச் கன்டோனில் ஏழு இலக்கங்களைக் கொண்ட வாகன உரிமத்தகடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

வாகன இலக்க தகடுகளுக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button