சுவிட்சர்லாந்தில் உற்பத்திகளை நிறுத்தும் பிரபல்ய உணவு உற்பத்தி நிறுவனம்
சுவிட்சர்லாந்தில் உற்பத்திகளை நிறுத்தும் பிரபல்ய உணவு உற்பத்தி நிறுவன
சுவிட்சர்லாந்தில் இருதுந்து பல உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று தனது இனி சுவிசில் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.
ஜாம்கள், டின்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட ரவியோலி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற சுவிஸ் பிராண்டான ஹீரோ, 1886 ஆம் ஆண்டு முதல் தமது உற்பத்திகளை சுவிட்சர்லாந்தின் Canton Aargau இல் Lenzburg பகுதில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ” ஹீரோ” Brand தயாரிப்புகள் குழந்தைகளுக்கான போத்தலில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு மிகவும் பிரபல்யமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உற்பத்தி நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்பெயினுக்கு மாற்றப்படும் என குறிபத்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ‘
இது சுவிட்சர்லாந்தில் பிரபலமாக இருந்த மற்றுமொரு தயாரிப்பின் முக்கிய இழப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சுவிசில் பிரபல்யமாக இருந்த டோப்லெரோன் சாக்லேட் (Toblerone chocolate) உற்பத்திகள் ஸ்லோவாக்கியா நாட்டுக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.