சுவிஸ் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2024 ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5% அதிகரித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இந்த வளர்ச்சி சராசரியை விட சற்று அதிகமாக உள்ளது.
0.2 முதல் 0.4% வளர்ச்சியை மட்டுமே பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 0.5% அதிகரித்துள்ளது.
மூலம் -Swissinfo