Swiss headline News

சுவிஸில் முட்டை இறக்குமதியை அதிகரிக்கத் திட்டம்

சுவிஸில் முட்டை இறக்குமதியை அதிகரிக்கத் திட்டம்

சுவிஸில் முட்டை இறக்குமதியை அதிகரிக்கத் திட்டம் சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டை பயன்பாடு அதிகரிப்பு காரணமாக இறக்குமதியை அதிகரிப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மத்திய பொருளாதார விவகார கல்வி மற்றும் ஆய்வு திணைக்களம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

சுவிஸில்

முட்டை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மேலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முட்டை கைத்தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு முட்டை அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

7500 தொன் இடையே எடையுடைய முட்டை இறக்குமதி 24928 தொன்னாக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்று காலம் முதல் சுவிட்சர்லாந்தில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் அந்த பழக்கம் தொடர்ச்சியாக நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டு கால பகுதியில் நாட்டின் முட்டை நுகர்வானது சுமார் 35 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சராசரியாக தனி நபர் ஒருவர் 186 முட்டைகளை நுகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button