லெபனான், இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம் மேலும் நீடிப்பு
லெபனான், இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம் மேலும் நீடிப்பு
லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம் மேலும் நீடிக்கப்படுவதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 வரையில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தெல் அவீவ் மற்றும் லெபனானின் பெய்ரூட்டுக்கான விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான் பரப்புக்களை பயன்படுத்தப் போவதில்லை என சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக இன்றைய தினம் வரையில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது எதிர்வரும் 21ம் திகதி வரையில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.