சுவிஸில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை?
சுவிஸில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை?
சுவிஸில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை? பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தடுப்பதற்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று Dietikon இல் உள்ள அரசியல்வாதிகள் வலியுறுத்துகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Dietikon பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய நகர சபைக்கு Dietikon GLP உறுப்பினர் Sophie Winkler-Payot வலியுறுத்தியுள்ளார்.
இடைவேளையின் போது கூட குழந்தைகள் இனி பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஸ்மார்ட்வாட்ச்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“Dietikon இல் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இடைவேளையின் போது ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும், சிலர் டிக்டோக் கில் உலாவுவதற்காக, அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்காக வகுப்பின் போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் வேண்டும் என்று பாசாங்கு செய்வதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.
இது அவர்களுக்கு அருகில் உள்ள மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மாணவர்களின் நேரத்தையும், அறிவையும் கொள்ளையடிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். இது கற்றல் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. செல்போன் இல்லாத குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம் – Zueritoday