Swiss Local NewsZug

காருக்குள் குளவி கொட்டியதால் விபத்தில் சிக்கிய இளைஞன்

காருக்குள் குளவி கொட்டியதால் விபத்தில் சிக்கிய இளைஞன்

காருக்குள் குளவி கொட்டியதால் விபத்தில் சிக்கிய இளைஞன் கன்டோன் சுக் (Zug) இல் காருக்குள் குளவி கொட்டியதான் நிலைதடுமாறிய ஓட்டுனர் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று A4 இல் இடம்பெற்றுள்ளதாக சுக் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாகவது:

Rütihof சந்தியில், 18 வயதுடைய சாரதி ஒருவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புச் சுவரில் மோதியுள்ளார். எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குளவி கொட்டியதால்

இந்த விபத்து சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் A4 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இளம் சாரதியின் அறிக்கைகளின்படி, வாகனத்திற்குள் குளவி கொட்டியதால் கவனத்தை சிதறடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் 18 வயது இளைஞன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விபத்தில் சிக்கிய கார் மொத்தமாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:- (c) Kantonal Polizei Zug

Related Articles

Back to top button