Swiss informations

சுவிட்சர்லாந்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் தற்கொலை இயந்திரம்

சுவிட்சர்லாந்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் தற்கொலை இயந்திரம்

சுவிட்சர்லாந்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் தற்கொலை இயந்திரம் சுவிட்சர்லாந்தின் தனித்துவமான தாராளவாத உதவித்தற்கொலைச் சட்டத்தின் கீழ், நாட்டின் ‘தற்கொலை கிளினிக்குகளில்’ தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புபவர்கள், பொதுவாக மரணமடையும் மருந்துகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

ஆனால் விரைவில் மற்றும் ஒரு ‘இறக்கும் முறை’ சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘தற்கொலை பாட்’ ‘Suicide capsule’ என அழைக்கப்படுவதோடு ‘அமைதியான மரண அனுபவத்தை’ இது வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் Exit International
(c) Exit International

குறித்த தற்கொலை இயந்திரத்துக்குள் படுத்திருக்கும் நபர் நைட்ரஜனை வெளியிட ஒரு பொத்தானை அழுத்தினால், ஆக்ஸிஜன் அளவு விரைவாகக் குறைத்துஇ அதன் விளைவாக இறப்பு நிகழும் என கூறப்படுகிறது.

இது பயங்கரமாகத் தோன்றினாலும், பெர்ன் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவக் கழகத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் ஜாகோவ்ஸ்கி கூறுகையில்,  உடலில் ஆக்சிசன் குறைவடைவது இனிமையானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.

Exit International என்ற உதவி தற்கொலை அமைப்பு, இந்த இயந்திரத்தை வடிமைத்துள்ளதோடு ‘விரைவில்’ பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது எப்போது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related Articles

Back to top button