Swiss headline News

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூரிச்சில் தரையிறங்கினார்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூரிச்சில் தரையிறங்கினார்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூரிச்சில் தரையிறங்கினார்!! இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு, உக்ரேன் ஜனாதிபதி விமானம் மூலம் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளார்.

உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை விமான நிலையத்தில் உக்ரைனுக்கான சுவிட்சர்லாந்தின் தூதர் பெலிக்ஸ் பாமன், சுவிட்சர்லாந்தின் நெறிமுறைகளின் துணைத் தலைவர் மானுவல் இர்மான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான உக்ரைன் தூதர் இரினா வெனிடிக்டோவா ஆகியோர் வரவேற்றனர்.

உக்ரைன், அதிபர் ஜெலென்ஸ்கி, சூரிச்

உக்ரேனிய ஜனாதிபதி விமானத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மகாநாடு இடம்பெறும் பர்கென்ஸ்டாக்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். ஜெலென்ஸ்கி சனி மற்றும் ஞாயிறு அன்று பர்கென்ஸ்டாக்கில் இடம்பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்பார்.

மேலும் குறித்த மாநாட்டில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உட்பட ஏராளமான நாட்டு தலைவர்கள் மற்றும் அரசு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

57 நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்கள் உட்பட 92 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பிப்ரவரி 2022 இல் உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா இந்த மாநாட்டை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனா போன்ற நாடுகள் மற்றும் ரஷ்யாவிற்கு நெருக்கமான பிற நாடுகளும் மாநாட்டிற்கான அழைப்பை நிராகரித்துள்ளன.

Related Articles

Back to top button