சுவிஸ் இளம்பெண் சாதனை – போதைப்பொருள் எதிரப்பு பக்ரீயா கண்டுபிடிப்பு
சுவிஸ் இளம்பெண் சாதனை – போதைப்பொருள் எதிரப்பு பக்ரீயா கண்டுபிடிப்பு பாசல் மாகாணத்தில் உள்ள 19 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் போதைப்பொருள் எதிர்ப்பு பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளார். அதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பாசலைச் சேர்ந்த நோரா ஆர்டிகோ என்ற குறித்த பெண்இ தனது மதுரா ஆய்வறிக்கையில் ஐந்து வகையான பக்ரீரியாக்களை கண்டுபிடித்ததாக எழுதினார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு பக்ரீரியாக்கள் ஒரு சாத்தியமான மாற்று என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் பாசல் மிருகக்காட்சிசாலையில் இருந்து மலத்தினுடைய மாதிரிகளைப் பாதுகாத்து சூரிச்சில் உள்ள ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மையத்தில் ஆய்வு செய்தார்.
ஆய்வில் வெற்றி பெற்ற பின்னர் குறித்த பெண்ணுக்கு இரண்டு இரண்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது- அவர் மதுரா சுவிஸ் இளைஞர் ஆராய்ச்சி விருதையும், இளம் விஞ்ஞானிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் போட்டியில் இருந்து சிறப்புப் விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.