சர்கான்ஸ் A13 நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்
சென்ட்காலன் கன்டோன் சர்கான்சில் நேற்று வியாழன் அன்று ஏ 13 நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
31 வயதுடைய நபர் ஒருவர் தனது காரையும் இரண்டு பயணிகளையும் ஏற்றிக்கொண்டு A13 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது காரில் சக்தி இழப்பைக் கவனித்தார்.
பின்னர் என்ஜின் பெட்டியில் இருந்து கடும் புகை வருவதை கவனித்தார். காரில் இருந்த மூன்று பேரும் காயமின்றி காரில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
புகை காரணமாகஇ த்ரூபாக்கிலிருந்து சர்கான்ஸ் நோக்கிச் செல்லும் சாலை சிறிது நேரம் மூடப்பட வேண்டியதாயிற்று. பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டது. மேலும் ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட ஆல்கஹால் சோதனையில் 31 வயதுடைய நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதும் தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு என தெரியவந்துள்ளது. இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.