Vaud மாகாணத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த போலீசார்..!!
Vaud மாகாணத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த போலீசார்..!! சுவிஸ் மாகாணமொன்றில் அமைந்துள்ள அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம்
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள La Tour-de-Peilz என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிசார் அந்த கட்டிடத்தை சுற்றிவளைத்தனர்.
ஆயுதமேந்திய பொலிசார் அந்த குடியிருப்பில் உள்ள மற்றவர்களை பத்திரமாக வீடுகளுக்குள் இருக்கும்படி கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளார்கள்.
அந்த வீட்டில் ஒரு 30 வயதுப் பெண் வசித்துவந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து யாரோ இரண்டுபேர் சத்தமாக வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டதாக அந்த வீட்டில் வாழும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த வீட்டிலிருந்து ஒரு ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்தப் பெண்ணின் காதலராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கும் கைவிலங்கு மாட்டி பொலிசார் அழைத்துச் சென்றதாக அந்த சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.