Swiss headline News

சுவிஸில் சுட்டு கொல்லப்படும் ஓநாய்கள் : ஏன் தெரியுமா.?

சுவிஸில் சுட்டு கொல்லப்படும் ஓநாய்கள் : ஏன் தெரியுமா.? சுவிட்சர்லாந்தில் ஓநாய்களின் பிரச்சினை அண்மைக்காலமாக சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பது ஓநாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்படும் ஓநாய்கள்
கொல்லப்படும் ஓநாய்கள்

இவ்வாறு ஓநாய்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்து சுற்றாடல் மற்றும் மிருக நல நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் 100 பெட்டிகள் கொண்ட மிக நீண்ட ரயில்

ஓநாய்கள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்ட போதிலும் அண்மையில் அவற்றை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சட்டத்தளர்வு மூலம் ஓநாய்கள் அழிவடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செம்மறி ஆடுகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு ஓநாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button