வின்டர்தூரில் வன்முறை : தாக்குதல் நடத்திய 5 இளைஞர்கள் கைது
வின்டர்தூரில் வன்முறை : தாக்குதல் நடத்திய 5 இளைஞர்கள் கைது கடந்த டிசம்பர் 16, 2023 அன்று, வின்டர்தூரில் உள்ள ஒரு இளைஞர் கிளப்பில் வன்முறை மோதல் ஏற்பட்டது. அதன்போது ஒரு வாலிபர் காயமடைந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 5 பேரை இன்று விண்டர்தூர் நகர போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
டிசம்பர் 16 முதல் 17, 2023 இரவு, வின்டர்தூரில் உள்ள இளைஞர் கிளப்பில் 17 வயது இளைஞன் பலரால் தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது.
நகர காவல்துறையினரின் விசாரணையில், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட ஐந்து குற்றவாளிகள் சந்தேகத்திற்கு இடமானவர்கள் என கண்டறியப்பட்டது.
அவர்கள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கொசோவோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அல்பேனியாவை சேர்ந்தவர்கள். ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, காயமடைந்த நபருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரும் இன்று ஜனவரி 24, 2024 அன்று வின்டர்தூர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.