Swiss Local Newsluzern

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் 3 சிறுவர்கள் பலி

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் சிக்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

லூசர்ன் கான்டனின் கிராமிய பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

ஆறு மற்றும் ஏழு வயதான சிறுமிகளும், ஒன்பது வயதான சிறுவனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில்
சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் 3 சிறுவர்கள் பலி

இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருந்த வீடு எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button