ஓட்டுநர்களுக்கு உலகின் மிக மோசமான நகரங்களில் ஜெனீவா.!
ஓட்டுநர்களுக்கு உலகின் மிக மோசமான நகரங்களில் ஜெனீவாவும் இடம்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பரில் சுவிட்சர்லாந்தில் மதுவினால் ஏற்படும் பெரும்பாலான கார் விபத்துகளுக்கான இடமாக பெயரிடப்பட்ட பிறகு, ஜெனீவா இப்போது உலகின் மிகவும் நெரிசலான நகரங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு வாகனங்கள் நத்தை வேகத்தில் நகருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 387 நகரங்களில் சாலை போக்குவரத்தை ஒப்பிடும் 2023 ற்கான TomTom ட்ராஃபிக் இன்டெக்ஸின் கண்டுபிடிப்பு இதுவாகும் .
இக்கண்டுபிடிப்புகளின்படி ஜெனீவா 22 வது இடத்தில் உள்ளது. காரில் 10 கிலோமீற்றர்கள் பயணிக்க சராசரியாக 24 நிமிடங்கள் வரை செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிச் நகரை பொறுத்தமட்டில் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது. இது போக்குவரத்தின் அடிப்படையில் சற்று சிறப்பாக உள்ளது.
இது 28வது இடத்தில் உள்ளது. 10 கிமீ தூரத்தை கடக்க 23 நிமிடங்கள் வரை செல்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.