ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பிய பெண்
ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பிய பெண் சுவிட்சர்லாந்தில் சக்கர நாற்காலியில் இருந்த பெண் ரயில் தண்டவாளத்தில் விழுந்து அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.
சக்கர நாற்காலியில் இருந்த வயதான பெண்மணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்துஇ எதிரே வந்த ரயில் அவரை நெருங்கி வந்தபோதிலும், அவர் காயமின்றி உயிர்தப்பிய அதிசயம் நிகழ்ந்ததாக சுவிஸ் போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் செவ்வாய்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்ததாக ஆர்காவ் மாகாணத்தில் உள்ள போலீசார் தெரிவித்தனர்.
70 வயதான அந்த பெண், மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனெனில் அவர் சரியாக இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் விழுந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் ரயில் அவரை கடந்து செல்லும் போது பெண்மீது மோதவில்லை என குறிப்பிட்டார்கள்.
மின்சார சக்கர நாற்காலியின் பாகங்கள் பறந்ததால் மேடையில் இருந்த மற்றூரு நபர் லேசாக காயமடைந்தார். அவரைப்போலவே கீழே விழுந்த பெண்ணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்..
இச்சம்பவத்தால் பாசல் அருகே உள்ள ரயில் நிலையத்தில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.