Swiss headline News
சுவிட்சர்லாந்தில் திடீரென காணாமல் போன பலரது வங்கிக்கணக்குகள்
சுவிட்சர்லாந்தில் உள்ள பல வாடிக்கையாளர்களது வங்கிக்கணக்குகள் தன்னிச்சையாக மூடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பொதுவாக சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லத மோசடி போன்ற காரணங்களுக்காகவே வங்கிக்கணக்குகள் திடீரென மூடப்படும்.
மேலும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களது எக்கவுன்டை மூடும்போது பொதுவாக வங்கிகளில் இருந்து கடிதம் அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஆனால் அவ்வாறான எந்த முன் அறிவிப்பும் இன்றி பலரது வங்கிக்கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குறித்த வங்கி தம்மீதுள்ள தவறை குறிப்பிடாமல் கடந்து சென்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.