சுவிஸ் பிராங்க் என்ற பணம் மூன்று நாடுகளினுடைய தேசிய பணமா.?
சுவிட்சர்லாந்தன் நாணய அலகான சுவிஸ் பிராங்க் எப்படி எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தொடர்பான தகவல்களை எமது யூரியுப் சானலின் ஊடாக வழங்கியிருந்தோம். அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்றைய எபிசொடில் சுவிஸ் பிராங்க் பற்றிய இன்னுமொரு சுவாரசியமான தகவலைத்தான் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக சர்வதே நாணய அலகாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுவது நம் எல்லோருக்கும் தெரியும். மத்திய கிழக்கு நாடுகள் கூட பெற்றோலியம் போன்ற தமது வளங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது அங்கே சர்வதேச வர்த்தக சந்தையில் பயன்படுத்தப்படும் நாணய அலகாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அந்தந்த நாட்டுக்குரிய ஒரு நாணய அலகு பயன்படுத்தப்படும் என்கின்ற விடயங்களும் நமக்கு பரிட்சயமான விடயங்கள்தான். ஆனால் ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் நாணய அலகை இன்னுமொரு நாடும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்துகிறதா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. உதாரணமாக இலங்கை இந்திய நாடுகளில் ரூபாய் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இரண்டும் ஒன்றல்ல என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கை ரூபாய் இந்திய ரூபாய் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் சுவிட்சர்லாந்தினுடைய சுவிஸ் பிராங்க் அலகை ஏற்றுக்கொண்டு இன்னும் இரண்டு நாடுகள் அதே நாணய அலகை அதே பணத்தை பயன்படுத்துகிறது என்கின்ற விடயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அதாவது சுவிஸ் பிராங்க் என்ற பணம் மூன்று நாடுகளினுடைய தேசிய பணமாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம். என்னது சுவிஸ் பிராங்க சுவிசை தவிர வேறு நாடுகளும் தமது நாட்டு நாணயமாக பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி தெரியாத பலருக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணலாம்.
சரி வாங்க பார்க்கலாம் சுவிட்சர்லாந்து நாணயத்தை வேறு எந்த நாடுகள் தங்களது நாணயமாக பயன்படுத்துகின்றன எனபதை பார்க்கலாம்.
Liechtenstein :-
சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்ற ஒரு குட்டி நாடுதான் லிக்டெனஸ்டைன் (Liechtenstein ) என்ற நாடு. இந்நாடு அதன் பெரிய அண்டை நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் பண உறவைப் பேணிவருகின்றது.
சுவிஸ் பிராங்க் 1920களில் இருந்து லிக்டெனஸ்டைனின் அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்து வருகிறது. இது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழமான பொருளாதார உறவுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
Campione d’Italia:
அடுத்த நாடு “காம்பியோன் டி இத்தாலியா” என்ற இன்னுமொரு குட்டி நாடு. இது லுகானோ ஏரியின் கரையில் அமைந்துள்ளது. காம்பியோன் டி இத்தாலியா என்பது சுவிஸ் பிரதேசத்தால் சூழப்பட்ட ஒரு இத்தாலிய நிலப்பகுதியாகும்.
புவியியல் ரீதியாக இத்தாலிக்குள் இருந்தபோதிலும், இந்த விசித்திரமான பகுதி 1921 இல் சுவிஸ் ஃபிராங்கை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது. இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் வரலாற்று பொருளாதார காரணிகளில் வேரூன்றியு இருப்பதாக கருதப்படுகிறது. இது அருகிலுள்ள சுவிட்சர்லாந்து எவ்வாறன செல்வாக்கை கொண்டுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.
காம்பியோன் டி இத்தாலியா லுகானோ ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இத்தாலிய நிலப்பகுதி ஆனால் அது சுவிஸ் பிரதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் நாணயத் தேர்வில் ஒரு புதிரான வரலாற்றைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக இத்தாலிக்குள் இருந்தாலும், இந்த சிறிய பகுதி 1921 இல் தொடங்கி அதிகாரப்பூர்வமாக சுவிஸ் பிராங்கை பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தீருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.