சுவிஸ் குடியுரிமை நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்
சுவிஸ் குடியுரிமை நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்
சுவிஸ் குடியுரிமை பெறுவது எப்படி..? சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் போன்ற கேள்விகள் சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளில் வாழ்ந்துகொண்டு, சுவிட்சர்லாந்துக்கு ஒரு தடவையேனும் சென்றுவிடவேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கும் இருக்கின்ற பொதுவான கேள்விகள்.
சுவிஸ் குடியுரிமை பெறுவது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. அது பல படிமுறைகளை தாண்டிய ஒரு செயற்பாடு. அப்படி பட்ட சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான தகுதியுடைவர்களே அஞ்சுகின்ற ஒரு விடயம், சுவிஸ் குடியுரிமை நேர்முகத்தேர்வில் என்னவெல்லாம் கேள்விகள் கேட்கப்படும் என்பதாகத்தான் இருக்கிறது.
ஏன் என்றால் அந்த கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள்தான் இறுதியாக உங்கள் சுவிஸ் குடியுரிமை விடயத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. சுவிஸ் குடியுரிமை பெறுவது எப்படி? என்ற விரிவான தகவல்களை இன்னுமொரு காணொளி வழியாக விரிவாக பார்க்கலாம்.
மேலும் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பான காணொளி நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். அதைப்பார்க்கதவர்கள் கீழ் உள்ள காமண்ட் பகுதியில் உள்ள லிங்கை அழுத்தி பார்க்கவும்.
இன்றைய இந்த எபிசோடில் சுவிஸ் குடியுரிமை பெறுவற்கான நேர்முகத்தேர்வுகளில் கேட்கப்படும் ‘பொதுவான” மற்றும் “சிக்கலான” சில கேள்விகள் தொடர்பான தகவல்களை வழங்குகிறோம்.
இது குடியுரிமைக்கான எல்லாத்தகுதிகளையும் பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு கொஞ்சமேனும் தெளிவுபடுத்தும் என நம்புகிறோம்.
கேள்விகளுக்கு போவற்கு முன்னர் சுவிஸ் குடியுரிமை பெறுவது என்பது எவ்வளவு சிக்கலான ஒரு விடயம் என்பதற்கு சான்றான ஒரு சில சம்பவங்களையும் இங்கே உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.
கேள்விகளுக்கு போவற்கு முன்னர் சுவிஸ் குடியுரிமை பெறுவது என்பது எவ்வளவு சிக்கலான ஒரு விடயம் என்பதற்கு சான்றான ஒரு சில சம்பவங்களையும் இங்கே உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்காவ் கன்டோனில் இடம் பெற்ற சம்பவவே இது :-
சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த 25 வயதுடைய நபர் ஃபண்டா யில்மாஸ்இ அவர் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான எழுத்துத் தேர்வுகள் மற்றும் கவுன்சில் நேர்காணல்களில் தேர்ச்சி பெற்ற போதிலும் ஆர்காவ் மாகாணத்தில் நிராகரிப்பை எதிர்கொண்டார்.
தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த இவர்இ சுவிஸ் ஜெர்மன் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர். இதற்கும் மேல் சுவிஸ் பெண்ணுடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டவர். ஆனால் ஃபண்டா யில்மாஸ் ‘குடியுரிமை பெற தகுதி போதாது’ எனக் கருதப்பட்டு அவரது கோரிக்கை நிராக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட வாழ்க்கை முதல்இ வேலை மற்றும் சுவிஸ் மலைகள் பற்றிய அறிவு வரை அவரிடம் சுமார் 70 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கேள்விகளுக்கு அவர் அளித்திருந்த பதில்களில் திருப்தியல்ல என்பதை அடிக்கோடிட்டு சுவிட்சர்லாந்தின் இயற்கை பற்றிய அறிவு போதாமை என குறிப்பிடப்பட்டு அவரது குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
யில்மாஸ் எதிர்கொண்ட கேள்விகளில் பின்னாளில் ஊடகங்களால் வெளியிடப்பட்டு பல்வேறு விமர்சனங்களையும் எதிர்நோக்கியிருந்தது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பல சிக்கலான கேள்விகளும் இருந்தாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அவரது உடல்நலக் காப்பீட்டு மாதிரிஇ சமூக வாழ்க்கைஇ சுவிட்சர்லாந்தில் விடுமுறை பழக்கம் மற்றும் நடைபயணத்திற்கான விருப்பம் போன்ற சாதாரண கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும் நடைபயணத்திற்கு விரும்பமா என்ற கேள்விக்கு அவர் இல்லை என்று பதில் அளித்திருந்தமையும் நிராகரிப்புக்கு ஒரு காரணமாகவே அமைந்திருந்தது.
இது மாத்திரம் இல்லாமல், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த ஒரு அமெரிக்கப் பேராசிரியர் 39 ஆண்டுகளுக்குப் பிறகு போதிய உள்ளூர் அறிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டிருந்தார்.
மற்றும் ஒரு டச்சுப் பெண் சுவிசில் மாடுகளில் கட்டியிருக்கும் மணிகள் அதன் ஒலி பற்றியும் அவர்கள் இருக்கும் பகுதியில் வாழும் கொசாவா நாட்டைச்சேர்ந்தவர்கள் அணியும் ஆடைகள் பற்றியும் புகார் அளித்திருந்தமையினால் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழந்திருந்தார்.
சுவிஸ் குடியுரிமை என்பது பணம் செலவழித்தால் எடுத்துவிடமுடியும்.. படித்தால் எடுத்துவிடமுடியும்.. இங்கு பிறந்து வாழ்ந்தாலே போது கிடைத்துவிடும் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். இவற்றையெல்லாம் தாண்டி சுவிஸ் நாட்டை பற்றியும் சுவிஸ் நாட்டவர்கள் பற்றியும் இங்குள்ள சமூகம், சமயம், அரசியல், கலாசாரம் போன்ற விடயங்களில் உங்களுக்கான புரிதல் ஈடுபாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இருக்கிறது.
இன்னும் இலகுவாக சொல்லப்போனால் நீங்கள் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரை தினமும் பார்த்து முறைப்பவராக இருந்தால் இதுவும் உங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு பங்கத்தை விளைவிக்கலாம்.
சரி இனிமேல் சுவிஸ் குடியுரிமை நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் சில சாதாரண கேள்விகைள பார்ப்போம்.
சுவிஸ் அவசரகால எண்கள் உங்களுக்குத் தெரியுமா? ( Swiss emergency numbers)
ஆகஸ்ட் 1 (சுவிஸ் தேசிய தினம்) கொண்டாட்டத்திற்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா?
இது தவிர இதைவிட சிக்கலான பல கேள்விகளும் கேட்கப்படுகிறது. அவ்வாறான கேள்விகளையும் உங்களுக்கு தருகிறோம். உங்களை நீங்களே சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாகஇ இந்த கேள்விகள் கன்டோன் ஷ்விஸில் உள்ள பல்வேறு நகராட்சிகளால் குடியுரிமை கோரிக்கையாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளே என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
Muota Valley பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான பசுக்கள் எந்த நிறத்தில் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?
இவ்வாறான கேள்விகள் மிகவும் சிக்கலான கேள்விகளாவே இருக்கிறது. பாசல் பல்கழைகத்தினுடைய ஒரு வழக்கறிஞர் இப்படியான கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் சவாலான விடயம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
கோல்டாவ் (Goldau) மிருகக்காட்சிசாலையில் வாழும் இரண்டு விலங்கு இனங்களைக் குறிப்பிட முடியுமா?
இவ்வாறான கேள்விகளுக்கு நீங்கள் உள்ளூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று அங்கு என்ன வகையான விலங்குகள் வாழ்கின்றன எத்தனை வாழ்கின்றன என குறிப்பெடுத்தால் மட்டுமே சரியா கூறமுடியும். எனவே இதுவும் ஒரு சிக்கலான கேள்விதான்.
சுவிஸ் ஏனைய விளையாட்டுக்களை தவிர்த்து சுவிசின் ராஜாவாக கருதப்படும் விளையாட்டு எது என நினைக்கிறீர்கள்.?
இதற்கு பனிச்சறுக்கு விளையாட்டு எனக்குறிப்பிட்டால் நீங்கள் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெறுவதை மறந்துவிடவேண்டியதுதான். காரணம் சுவிசில் மிக முக்கிய விளையாட்டாக ஒரு வனை மல்யுத்த விளையாட்டு கருதப்படுகிறது. அந்த விளையாட்டு ஸ்விங்கன் என்று அழைக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்திற்கு அதிக குடியேற்றம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இதுவும் ஒரு சிறந்த சிக்கலான கேள்வியே. நீங்கள் வெளிநாட்டவரின் வருகையை எதிர்ப்பர் என பதில் அளித்தால் உங்களிடம் கேட்கப்படும் அடுத்த கேள்வி அப்படியானால் சுவிட்சர்லாந்தை முன்னேற்ற நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என் வினா தொடுக்கப்படும். எனவே கொஞ்சம் நிதானமாக சூடாகாமல் இந்த இப்படியான கேள்விகளுக்கு யாருமே பதில் கூறிவிட முடியாது.
What is an Oberallmiger?
இப்படியான ஒரு கேள்வி உங்களிடம் கேட்டால் எங்களை மன்னியுங்கள். காரணம் இந்த கேள்விக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என நாம் கூகுளில் தேடியும் அங்கு எந்த தகவலும் இல்லை என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எம்மால் முடிந்தளவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட விடயமாக இருப்பது கேபிள் கார்களில் இலவசமாக பயணிப்பதை குறிப்பிடுவதாகவே இருக்கிறது. இருந்தாலும் அது எந்தளவுக்கு உண்மை என்பது சந்தேகமே. காணொளி பார்க்கும் நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்து இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அல்லது இதற்கு உங்களால் பதில் சொல்ல முடிந்தால் காமண்டில் தயவுசெய்து சொல்லிவிடுங்கள். சரி ;அடுத்த கேள்விக்கு வருவோம்.
Guggenmusik (குக்கன் மியூசிக்) என அழைக்கப்படுவது என்ன?
‘Guggenmusik’ என்பது சுவிட்சர்லாந்தில் திருவிழாக்களின் போது இசைக்கருவிகளோடு அணிவகுப்பு செய்யும் இசைக்குழுக்கள் விளையாடும் பொதுவான சொல்.
What is a… Ländler? லேன்டர் என்றால் என்ன?
இது ஷ்விஸில் தோன்றிய ஒரு பாரம்பரிய நடனமாகும்.
உங்கள் குழந்தை நீச்சல் பயிற்சி எடுக்கிறதா?
குடியுரிமைத் தேர்வைத் தவிர, மற்ற எல்லாச் சூழ்நிலைகளிலும் இது ஒரு சாதாரண கேள்வியாக இருக்கலாம். ஆனால் இது ஒரு முக்கியமான கேள்வியும் கூட. ஏனென்றால் பள்ளியில் கட்டாய நீச்சல் பயிற்சியில் பங்கேற்காத ஒரு மகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பாலின சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு முஸ்லீம் இனத்தனவர் என்று சுவிஸ் அதிகாரிகள் இதை எடுத்துக் கொள்வார்கள்.
இதற்கு ஒரு சம்பவத்தை உங்களுக்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
2017 ஆம் ஆண்டில், பாசலில் ஒரு துருக்கிய தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களை பள்ளி நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்க மறுத்தபோது வழங்கினை சந்தித்திருந்தனர்.
இந்த வழக்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தம்பதியினர் சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பள்ளி தங்கள் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகக் அவர்கள் கூறினர்.
எவ்வாறாயினும், நீதிமன்றம் பெற்றோருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது, நீச்சல் பயிற்சிகள் உட்பட பள்ளி நடவடிக்கைகள், ‘சமூக ஒருங்கிணைப்பு செயல்பாட்டில், குறிப்பாக வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சிறப்புப் பங்கு வகிக்கின்றன.
எனவே நீச்சல் பாடங்கள் ‘நீச்சல் கற்றுக்கொள்வது மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற அனைத்து மாணவர்களுடன் குழுவாக செயலில் பங்கேற்பது’ என்றும் அதற்கு யாரும் தடைபோட முடியாது எனவும் தீர்பளித்திருந்தது.
இப்படியான பல இடியப்ப சிக்கல் கொண்ட கேள்விகளை எதிர்கொண்டுதான் சுவிட்சர்லாந்தின் குடியுரிமையை பெறவேண்டுமா என் ஆதங்கம் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. நாம் மட்டுமல் பல நிபுணர்களும் இது கொஞ்சம் ஓவரா இல்ல என்பது போலவே தங்களது கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி வான் ரூட்டே என்ற நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில்இ மேலே குறிப்பிட்ட சில கேள்விகளுக்கும் சுவிசின் இயற்கை மயமாக்கள் கொள்கைக்கும் சம்மந்தமில்லை என குறிப்பிட்டார். இது ஒரு சிறப்பு தேர்வு அல்ல. சாதாரண குடிமகன் ஒருவரிடம் மேற்கொள்ளப்படும் சராசரி தேர்வு.
அதற்கு இவ்வாறான கேள்விகள் கேட்ககூடாது என குறிப்பிட்டுள்ளார்.