சுவிஸ் வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை
சுவிஸ் வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை சுவிட்சர்லாந்து வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையைக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் பிராந்தியங்களிலும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பிராந்தியங்களிலும் இந்த நிலைமை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நிலவும் வழுக்கும் தன்மை காரணமாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு இடையில் போதியளவு இடைவெளியை பேணுவது உசிதமானது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”2″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இந்த வார இறுதி வரையில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான குளிருடனான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் வாகன விபத்துக்கள் பதிவாகியள்ளன.