சுவிட்சர்லாந்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 2019 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 22 சதவிகிதம் அதிகமான அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களிலிருந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க டாலருக்கும் பிராங்கிற்கும் இடையிலான மாற்று விகிதம் சாதகமாக இல்லாவிட்டாலும் அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்திற்கு வருகிறார்கள். இது இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விலை உயர்ந்த ஒன்றாகவே இருக்கிறது.
இருப்பினும் சுவிட்சர்லாந்தில் பணவீக்க விகிதம் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை விட குறைவாகவே இருக்கின்றது. இதன் காரணமாக பல அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.