Swiss headline NewsSwiss informations

சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிக்க இருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.!

சுவிட்சர்லாந்தில் பட்டாசு வெடிக்க இருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!! ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு சிறப்பு சந்தர்ப்பங்களில் சுவிட்சர்லாந்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பட்டாசுகளை வெடிக்க முடியாது என்பது இங்கு வாழும் மக்கள் அறிந்த விடயம்.

சுவிஸ் மண்டலங்கள் சில நிகழ்வுகளுக்கு பட்டாசு விற்பனையை நிபந்தனைகளோடு மேற்கொள்ளுகின்றது. இன்று, அதிகமான மக்களும் சமூகங்களும் புத்தாண்டு தினத்தினை வரவேற்க பட்டாசுகளை வெடிக்கவைக்க ஆவலாக இருப்பார்கள். இந்நிலையில் சுவிசின் சில முக்கியமான மாகாணங்களில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளும் அது தொடர்பான சில தகவல்களும் வெளியாகியுள்ளது.

பாசல் நகரில் பட்டாசு வெடிக்கலாமா.??

பாசல் சிட்டியில் பட்டாசு வெடிக்க விரும்புபவர்கள் டிசம்பர் முப்பத்தியோராம் திகதி மாலை 6 மணி முதல் ஜனவரி முதலாம் தேதி அதிகாலை 1 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி நீங்கள் எந்த வகையான பட்டாசுகளை எங்கு பயன்படுத்தலாம் என்பதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.

ராக்கெட் வகை பட்டாசுகள் எப்போதும் “நிலையான கொள்கலன்களில்” வைத்து சுடப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி தரையில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பட்டாசுகளை எவ்வாறு சரியாக வெடிப்பது என்பது குறித்த தகவல்களை நீங்கள் பாசல் கன்டோன் இணையத்தளத்தில் பார்க்க முடியும்.

 சுவிட்சர்லாந்தில், பட்டாசு வெடிக்க, முக்கிய அறிவித்தல்

மேலும் மருத்துவமனைகள் மற்றும் மிருககாட்சிசாலை இருக்கும் பகுதிகளில், குறைந்தது இருநூறு மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு சில வீதிகளின் நடைபாதைகளிலும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் விதிமுறைகளுக்கு இணங்காத எவருக்கும் 150 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படுவதோடு, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச் நகரில் பட்டாசு வெடிக்கலாமா.??

பாசல் சிட்டியைப் போலவே,  சூரிச்சில் வசிப்பவர்கள் புத்தாண்டு தினத்தன்று நகரத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். போலீஸ் அனுமதி அல்லது தீயணைப்புப்படையின் அனுமதியின்றி வெளியில் எரிக்கப்படும் சாதாரண பட்டாசுகளை கொழுத்த முடியும் என சொல்லப்படுகிறது.

மூடிய அறைகளில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளை கொளுத்த விரும்பினால், உள்ளூர் தீயணைப்பு காவல் துறையிடம் அனுமதி கேட்க வேண்டும். மேலும் நீர் நிலைகளின் அருகில் அவ்வாறான பட்டாசுகளை வெடிக்க விரும்பினாலும் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுவிட்சர்லாந்தில், பட்டாசு வெடிக்க, முக்கிய அறிவித்தல்

எவ்வாறாயினும், மனிதர்கள், விலங்குகள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும். அது மாத்திரமின்றி நகரில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி, தவறான வகை பட்டாசுகளை வெடிக்க முடிவு செய்தால் அல்லது மக்கள், விலங்குகள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சூரிச்சில் பட்டாசு வெடிக்கும் நபருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேர்ன் நகரில் பட்டாசு வெடிக்கலாமா.??

நீங்கள் பேர்ன் நகரில் பட்டாசுகளை வெடிக்க விரும்பினால், பேர்னின் பழைய நகரத்தில் உங்களால் பட்டாசுகளை வெடிக்கவைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ன் பழைய நகரம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திமூன்றாம்  ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இருந்து வருகிறது. மேலும் 12 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டதிலிருந்து அதன் தளவமைப்பு பெரிய அளவில் மாற்றங்கள் இன்றி இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.

 சுவிட்சர்லாந்தில், பட்டாசு வெடிக்க, முக்கிய அறிவித்தல்

கடந்த 2021 ஆண்டு முதல், நகரின் மையப்பகுதியில் பட்டாசு வெடிப்பது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பட்டாசு வெடிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கூட்டங்கள் அல்லது கட்டிடங்கள் மற்றும் கார்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை ஒளிக் காட்சியுடன் கொண்டாட விரும்புவோர், பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் படித்து, பட்டாசுகளை எவ்வாறு சரியாக வெடிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

ஜெனீவா நகரில் பட்டாசு வெடிக்கலாமா.??

ஜெனீவா, அதன் நகரம் அல்லது கன்டோனல் வலைத்தளங்களில் எந்த வானவேடிக்கை கட்டுப்பாடுகளையும் வெளியிடவில்லை என்றாலும், நள்ளிரவில் ஒரு பொது வாணவேடிக்கையுடன் நகரம் புத்தாண்டைக் கொண்டாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொண்டாட்டங்கள் இரவு 8 மணிக்கு இசையுடன் தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை நீடிக்கும் . ஜெனீவாவில் நீங்கள் சொந்தமாக பட்டாசுகளை வெடிக்க முடியுமா? என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் உள்ளூர் நகராட்சி மையத்தை அல்லது அதன் இணையத்தளத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

 சுவிட்சர்லாந்தில், பட்டாசு வெடிக்க, முக்கிய அறிவித்தல்

 

லவுசானில் பட்டாசு வெடிக்கலாமா.??

லவுசானில் நிலமைகள் எப்படி இருக்கும்? வாட் மாகாணம், பட்டாசுகளை வெடிக்க அனுமதித்தாலும், வெடிமருந்துகளை எவ்வாறு சரியாக இயக்குவது என்பதை உள்ளூர்வாசிகள் புரிந்து கொள்ளுமாறு எச்சரிக்கிறது. ஏனெனில் பெரும்பாலான காயங்கள் மற்றும் தீவிபத்துகள் பட்டாசுகளை பிழையான முறையில் கையாளுவதால் ஏற்படுவதாக எச்சரித்துள்ளது.

கன்டோன், பட்டாசுகளை வெடிக்க அனுமதித்தாலும் ஒரு சில வகை பட்டாசுளுக்கு முன்கூட்டிய அனுமதி தேவை என குறிப்பிட்டுள்ளது. கன்டோனல் போலீசாரின் உத்தியோகபூர்வ இணையளத்தில் அதுபற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 சுவிட்சர்லாந்தில், பட்டாசு வெடிக்க, முக்கிய அறிவித்தல்

கிராவுண்டனில் உள்ள பல நகராட்சிகள், பட்டாசு வெடிப்பதை தடை செய்கின்றன. இருப்பினும், அமைதியான முறையில் வெடிக்கும் சில பட்டாசுவகைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எந்த வகையான பட்டாசுகளை வெடிக்கவைக்கலாம், எவ்வாறானவை விதிவிலக்கானவை என்பது தொடர்பான தகவல்களுக்கு கன்டோன் இணையதளத்தை பார்வையிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள மற்ற எல்லாப் பகுதிகளுக்கும், பட்டாசு பற்றிய தகவலுக்கு உங்கள் உள்ளூர் நகராட்சி, நகரம் அல்லது மண்டலத்தை அணுகுமாறு நாம் பரிந்துரை செய்கிறோம்.

Related Articles

Back to top button