சுவிட்சர்லாந்தில் தமிழ் மின்னல் நடாத்தும்”மெகா நைற்” இசை நிகழ்வு..!
சுவிசர்லாந்தில் “தமிழ் மின்னல்” பெருமையுடன் நடாத்தும் “வணக்கம் தமிழா” மெகா நைற் (Mega Nite 2023) இசை நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் எதிர்வரும் நத்தார்தினமான 25ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். குறிப்பாக, இலங்கையின் புகழ்பூத்த மூத்த பாடகர் TMS புகழ் ரகுநாதன், தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளரான ஜீவராஜா, யாழின் பிரபல வாத்தியக்கலைஞர் பானு, மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்தும் மேலும் பல பாடகர்கள் கலைஞர்கள் என கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
டிசம்பர் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 14.00 மணிக்கு ஆரம்பாகும் குறித்த நிகழ்வில் நடுவர்கள் தலமைதாங்க, பல்வேறு பாடல் போட்டிகளும் இடம்பெற இருப்பதோடு வெற்றி பெறுபவர்களுக்காக பரிசில்களும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கின்றது.
போட்டி நிகழ்வின் நடுவர்களாக ரகுநாதன் மற்றும் யெர்மன் இசையமைப்பாளர் பிரின்ஸ் அவர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து வாழ் கலைஞர்களையும் ரசிகர்களையும் அன்போடு அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர். இந்த இசை நிகழ்விற்கான டிக்கெட்டுக்கள் தொடர்பான விபரங்களை Tamilminnal.Ch என்ற இணையதள முகவரி ஊடாகவும், 076 918 2524 மற்றும் 076 589 4065 என்ற தொலைபேசி இலக்கங்களினுடாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.