Swiss headline News
சுவிட்சர்லாந்தில் கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டுகோள்
சுவிட்சர்லாந்தில் கார்பன் வெளியீட்டை 75 வீதமாக குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கார்பன் வெளியீட்டை 75 வீதமாக குறைப்பது குறித்து நாட்டில் சட்டங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025 முதல் 2030ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது.
கார்பன் வெளியீடு தொடர்பில் வெளிநாடுகளில் முதலீடு செய்வதனை விடவும் உள்நாட்டில் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.