Swiss informations

பிரான்சில் தலைவைத்து சுவிட்சர்லாந்தில் கால் நீட்டி தூங்கலாம் – Hotel Arbez!

பிரான்சில் தலைவைத்து சுவிட்சர்லாந்தில் கால் நீட்டி தூங்கலாம் – Hotel Arbez! இப்படி ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் மல்லாக்கப்படுத்து தூங்கும் வசதி உலகிலேயே இந்த ஒரு ஹோட்டலில் தான் இருக்கிறது. ஏனெனில் ஹோட்டல் அர்பெஸ் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் முதல் அல்கொய்தா வரை உலக அரசியலில் இந்த ஹோட்டலின் பெயர் அடிபடுகிறது.

ஐரோப்பாவில் இருக்கும் இந்த ஹோட்டலில் நீங்கள் தங்கினால், உங்களுக்கு எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாது. சில நேரங்களில் நீங்கள் பிரான்சில் இருப்பதாக கூற முடியும், சில சமயம் ஸ்விட்சர்லாந்தில்.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் மல்லாக்கப்படுத்து தூங்கும் வசதி உலகிலேயே இந்த ஒரு ஹோட்டலில் தான் இருக்கிறது. ஏனெனில் ஹோட்டல் அர்பெஸ் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் இருக்கிறது.

5WFFJYOr4YUAozZkeQ eQj

பொதுவாக சர்வதேச எல்லைகள் மிகவும் தீவிரமான பாதுகாப்புடன் அல்லவா இருக்கும்? இது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம், உங்கள் கேள்விக்கான விடையைத் தேடுகிறது இந்தக் கட்டுரை.

அர்பெஸ் உருவானது எப்படி?

ஐரோப்பிய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக இது கட்டப்பட்டுள்ளது.இதனை ஒரு சிறிய குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஹோட்டல் அர்பெஸ் ஃப்ரான்கோ சுஸ்ஸி எனும் இன்ய்த ஹோட்டல், L’Arbézie (லர்பேஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தையும் பிரான்ஸையும் பிரிக்கும் காடுகள் நிறைந்த ஜுரா மலைகளில் அமைந்துள்ளது. 1862ம் ஆண்டு இந்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு சாலையை பிரான்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் விதமாக சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

0345644f90cb340d1787c17667da1da3f87df8229e750d8de658785c4c01799611ed806323af40860392ef2522a458e2d45fafff5db5964b682d0cf97d3ca69e

டாப்ஸ் ஒப்பந்தம் எனப்படும் அந்த ஒப்பந்தத்தில் சற்றும் எதிர்பாராத விளைவாக உருவானது தான் இந்த அர்பெஸ் ஹோட்டல்.

எல்லையில் இருக்கும் கட்டிடங்கள் அப்படியே இருக்கவும் எல்லையைத் தாண்டி வணிகத்தை மேற்கொள்ளவும் டாப்ஸ் உடன்படிக்கை அனுமதித்தது.

உடன்படிக்கை கையெழுத்தான காலத்தில் இந்த ஹோட்டல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான பாந்தஸ் என்பவரின் பெயரில் இருந்தது. இதனை 1921ம் ஆண்டு ஜூல்ஸ்-ஜீன் அர்பெஸ் என்பவர் வாங்கி, ஹோட்டலாக மாற்றிக்கொண்டார்.

வேடிக்கை நிகழ்வுகள்

இரண்டு நாட்டுக்கும் நடுவில் இருக்கும் இந்த ஹோட்டலில் இரண்டு நாட்டும் கொடிகளையுமே ஆங்காங்கு பார்க்க முடியும். கொடிகள் வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல, அவை அந்த பகுதி எந்த நாட்டுக்கு உரியது என்பதையும் தெரிவிக்கும்.

சில அறைகளில் குறுக்காக இருக்கும் கட்டிலில் படுத்தால் கை பிரான்ஸிலும் கால் சுவிட்சர்லாந்திலும் இருக்கும். அறைகளில் தொங்கும் ஓவியங்களை ஒரு பக்கமாக சாய்த்தால் சுவிட்சர்லாந்தில் இருந்து பிரான்ஸுக்கு கொண்டுவந்துவிட முடியும்.

66z2eKajKsAAvjIsLJLbct

சில அறைகள் முழுவதுமாக ஒரே நாட்டுக்கு உரிய இடத்தில் இருக்கும், ஆனால் அதன் சுவர் மற்றொரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும்.

ஒருமுறை சுவிட்சர்லாந்து சுங்க அதிகாரிகள் ஒரு அறையில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர். நீங்கள் நினைப்பது போல அவர்கள் சூதாட்டமெல்லாம் ஆடவில்லை. ஆனால் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட சீட்டுகட்டைக் கொண்டு சுவிட்சர்லாந்தில் இருக்கும் அறையில் விளையாடினர். பொருட்களை எடுத்துவரும் போது வரிகட்ட வேண்டும் அல்லவா?

Related Articles

Back to top button