17 வயதை பூர்த்தி செய்த பிரான்ஸ் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்த அனுமதி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிரான்சில் 17 வயதான பிரஜைகள் வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் குறித்த 17 வயதினை பூர்த்தி செய்த சாரதிகள் சுவிட்சர்லாந்திலும் வாகனம் செலுத்த அனுமதிக்கப்பட உள்ளனர்.
நிபந்தனை அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வந்த ஒருவரின் கண்காணிப்பின் கீழ் சுவிட்சர்லாந்து வீதிகளில் 17 வயதினை பூர்த்தி செய்த வாகனம் செலுத்த அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஐரோப்பாவின் அயர்லாந்து, ஐஸ்லாந்து, ஐக்கிய ராஜ்யம், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த நடைமுறை அமுலில் உள்ளது.
எனினும் சுவிட்சர்லாந்தில் வயது வந்தவர் ஒருவரின் கண்காணிப்பு இன்றி வாகனம் செலுத்தக்கூடிய குறைந்தபட்ச வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.
Source:- Tamilinfo