Image default
Swiss headline News

16 இலங்கையர்களை பலவந்தமாக நாடுகடத்திய சுவிட்சர்லாந்து!

கடந்த திங்கள்கிழமை இரவு 10:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் 6 பெண்கள் உள்ளடங்களாக 16 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் காலை 9:00 மணி அளவில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்களில் ஓர் இளைஞன் தனக்கு இலங்கைக்கு சென்றால் இலங்கை அரசினால் உயிர் ஆபத்து இருப்பதாக கூறி செல்ல மறுத்த போதும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

22 6217325bc32c1

இந்நிலையில் தான் மிகுந்த மன அழுத்தத்துடனும் இருப்பதாகவும் இலங்கை அரசினால் தனது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடன் இருப்பதாக அவ் இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் உண்டானதாக கூறப்படுகிறது. அஎனினும் அவருக்கு உடனடியாக மருந்து கட்டப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அந்த விமானத்தில் பயணித்த இன்னுமோர் அகதி தஞ்ச கோரிக்கையாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Related posts

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து மக்களுக்கான கசப்பான செய்தி.!!

admin

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இன்னிசை சங்கமம்

admin

சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உடன்படிக்கை

admin

Leave a Comment