SwissTamil24.Com
Swiss headline News

தண்ணியில கண்டம் – சுவிஸ் மக்கள் குடிக்கும் தண்ணீர் குறித்த அதிர்ச்சி செய்தி!

தண்ணியில கண்டம் – சுவிஸ் மக்கள் குடிக்கும் தண்ணீர் குறித்த அதிர்ச்சி செய்தி! சுவிட்சர்லாந்தில் வாழும் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் ரசாயனம் ஒன்று அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் Chlorothalonil என்னும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம், பயிர்களை பூஞ்சைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும், மரக்கட்டைகளை பாதுகாப்பதற்காகவும், சுவர்களில் பூஞ்சை பிடிக்காமல் இருப்பதற்காக பெயிண்ட்களிலும் பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளில் காணப்படும் ஒரு ரசாயனமாகும்.

தண்ணீரில் கலக்கும் ரசாயனம்

இதுபோல பயிர்களிலும், மரக்கட்டைகளிலும், வீடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளிலுள்ள இந்த Chlorothalonil என்னும் ரசாயனம், தண்ணீரிலும் கலக்கத்தான் செய்யும்.

ஆனாலும், அதற்கும் ஒரு அளவு உள்ளது. உணவுப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக அதில் நஞ்சை சேர்க்க முடியாது அல்லவா? ஆனால், இந்த ரசாயனம் இப்போது தண்ணீரில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

தண்ணியில கண்டம், சுவிஸ் மக்கள்,அதிர்ச்சி செய்தி

மருந்தே நஞ்சாகிப்போகும் பயங்கரம்… சுவிஸ் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குறித்த ஒரு அதிர்ச்சி செய்தி! | Shocking News About The Water Used By Swiss People

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ரசாயனம்

சுவிட்சர்லாந்தில் 700,000 மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில், அனுமதிக்கப்பட்ட அளவான 0.1 மைக்ரோகிராமை விட அதிக அளவில் Chlorothalonil என்னும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி, சுவிட்சர்லாந்தில் இந்த ரசாயனத்தைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும், மண்ணிலும் தண்ணீரிலும் நுழைந்த இந்த ரசாயனம் அப்படியே நிலைக்கிறது.

பிரெஞ்சு மொழி பேசும் Fribourg இல் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 17% அளவிலும், Vaud இல் 14% அளவிலும் Bernஇல் 10% அளவிலும் இந்த ரசாயன காணப்படுகிறது.

Chlorothalonil என்னும் இந்த ரசாயனம், புற்றுநோயை உருவாக்கலாம் என வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு ரசாயனம் என்பது குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

தாஜ்மகாலுக்கு சென்ற சுவிஸ் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

admin

சுவிட்சர்லாந்து செய்திகள் (14/11/2023) – Swiss Tamil News Today

admin

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள்.!!

admin

As tech companies get richer, is it ‘game over’ for startups?

admin

சுவிஸில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை

admin

சுவிட்சர்லாந்து சாக்லெட் தொழிற்சாலையில் நடிகை தமன்னா.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More