ஸ்விஸ் கன்டோன் Freienbach பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து.!! Freienbach பகுதயில் இன்று திங்கட்கிழமை தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 2023 ஜனவரி 30 திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பத்தினை அறிந்த Pfäffikon தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Kirchstrasse இல் உள்ள ஒரு அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, தீயணைப்பு படை வருவதற்குள் அது அணைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புகையை சுவாசித்ததாக சந்தேகிக்கப்படுவதால் இரண்டு குடியிருப்பாளர்கள் மீட்பு சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து ஸ்விஸ் கன்டோனல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.