வாழ்க்கைச் செலவு பிரச்சனைக்கு உதவி வழங்கப்படாது – சுவிஸ் அரசாங்கம். வாழ்க்கை செலவு காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு அரசாங்கம் உதவி வழங்காது என அறிவித்துள்ளது.
பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதனால் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு நிதி ரீதியான உதவிகள் எதனையும் சமஸ்டி அரசாங்கம் வழங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணம் ஒன்றும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி உதவிகள் வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் சுகாதார காப்பீடு போன்றவற்றுக்கான கட்டணங்கள் உயர்வடைந்து செல்லும் நிலையில் அவற்றை ஈடு செய்வதற்காக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவி செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைக்கு அவ்வாறான உதவிகளை வழங்க முடியாது என சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், கான்டன் அரசாங்கங்கள் இது தொடர்பில் நடவடிக்கையை எடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி :- நன்றி இணையம்