முக்கிய செய்திகள்

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை – சுவிஸ் நிர்வாகம்

சுவிட்சர்லாந்து விசா

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை – சுவிஸ் நிர்வாகம் வடகொரியாவில் தொடர்ந்து மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக சுவிஸ் நிர்வாகம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான சுவிஸ் பிரதிநிதிகளில் ஒருவரான Felix Baumann, வட கொரியாவில் மனித உரிமைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லாதது குறித்து சுவிஸ் நிர்வாகம் கவலைப்படுவதாக புதன்கிழமை மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

மட்டுமின்றி, வடகொரியாவில் முன்னெடுக்கப்படும் மனித உரிமை அத்துமீறல்கள், தடுப்பு மையங்களில் சித்திரவதை மற்றும் கட்டாய உழைப்பு உள்ளிட்டவை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை, சுவிஸ் நிர்வாகம்

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வடகொரியா அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, வடகொரியாவில் இருந்து வெளியேற முற்படும் மக்களை கண்ட உடனையே சுட்டுக்கொல்வதும் கண்டனத்திற்கு உரியது என குறிப்பிட்டுள்ள அவர்,

கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்கும் மக்களை கொலை செய்துள்ளதும் கைது செய்துள்ளதும் உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்

மட்டுமின்றி, உலக நாடுகள் உதவ முன்வரும் போது வட கொரியா அதை ஏற்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts