SwissTamil24.Com
Swiss Local Newsluzern

லுசேர்ன் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு போலீசார் முக்கிய அறிவிப்பு

லுசேர்ன் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக லுசேர்ன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தரிப்பிடங்களில் பூட்டப்பட்டு பார்க்கிங் செய்திருக்கும் கார்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதான போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

லுசேர்ன் மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகிறது என போலீசார் தெரிவித்துள்ளார்கள். மேலும் லுசேர்ன் மற்றும் அதனை அண்டிய எம்மன் பகுதியில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான திருட்டு சம்பவங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையான இருக்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லுசேர்ன் மாகாணத்தில், சுவிஸ், சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் செய்திகள், SwissTamilNews, TamilSwiss
லுசேர்ன் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு போலீசார் முக்கிய அறிவிப்பு

போலீசாரின் அறிவிப்புப்படி பின்வரும் நடமுறைகளை நீங்கள் பின்பற்றினால் திருட்டு சம்பவங்களில் இருந்து உங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். அவையாவன :-

???? காரில் விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வைக்க வேண்டாம். காரில் இருக்கும் சிறிய மறைவான பகுதியை கூட திருடர்கள் விட்டுவைப்பதில்லை.

???? எப்பொழுதும் காரை பூட்டி வைக்கவும்  சிறிது நேரம் இல்லாத போதும். கார் வீட்டின் பின்புறம் அல்லது கேரேஜில் இருப்பது போன்ற பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் கூட. நீங்கள் தொலைவில் இருக்கும்போது பக்கவாட்டு அல்லது கூரை ஜன்னல்கள் எப்பொழுதும் முழுமையாக மூடப்பட வேண்டும்.

???? சந்தேகத்திற்கிடமான நபர்களை உடனடியாக அவசர எண்ணான 117 க்கு தெரிவிக்கவும். உதாரணமாக, யாராவது பதுங்கியிருந்தால் அல்லது நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சேதப்படுத்தினால் உடனடியாக போலீசாரின் அவசர இலக்கத்திற்கு அறிவிக்கவும்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

Rapperswil-Jona SG பகுதியில் கத்தி முனையில் கொள்ளைச்சம்பவம்..!!

admin

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது

admin

சுவிஸ் சென்ட்காலன் மாநிலம் Schmerikon இல் டிரக்கின் பேட்டரிகள் தீப்பித்தது

admin

Appenzeller Bahnen இல் இருந்து வந்த ஒரு ரயில் காருடன் மோதி விபத்து.!!

admin

சுவிசில் போலீசாரின் திடீர் சோதனை : சிக்கிய 272 ஓட்டுனர்கள்..!!

admin

Schaffhausen மாகாணத்தில் நகை திருடிய போலீ போலீசார்..! எச்சரிக்கை.!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More