லுசேர்ன் நகரில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்களை சேதப்படுத்தியை நபர்களை லுசேர்ன் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை (பிப்ரவரி 3-4, 2023) இரவு நேரத்தில் லுசேர்ன் நகரில் உள்ள St. Karlistrasse ஸில் மொத்தம் ஆறு கார்களை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
சில சமயங்களில் வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாசகார வேலைகளின் காரணமாக மொத்த சொத்து சேதம் பல ஆயிரம் பிராங்குகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக லுசேர்ன் போலீசார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி தகவல் தெரிவிக்க விருப்புபவர்கள் 041 248 81 17 என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளவும் எனவும் கன்டோன் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்