முக்கிய செய்திகள்

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ்

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவைத் தொடர்ந்து, மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு காரணமானவர்கள் எனக் கருதப்படும் 11 பேர் மீது சுவிட்சர்லாந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இராணுவ ஆட்சிக்குழு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மியான்மர் அரசாங்கத்தை கவிழ்த்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுவிஸ் நிர்வாகம் இந்த முடிவு வருகிறது. அப்போதிருந்து, ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒரு பயங்கரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சுவிஸ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

மியான்மர்

இதில், மியான்மர் தளபதி மின் ஆங், ஒன்பது உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே சுவிட்சர்லாந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவர்கள் இனி சுவிட்சர்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மட்டுமின்றி, இவர்களின் எந்த சொத்துகளும் முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மியான்மர் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நடந்த வன்முறையில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 107 பேர் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 1 ம் தேதி நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர் இதுவரை 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:- Lankasri

Related posts