மாபியா குற்றச்செயல்களை தடுக்க போதிய அளவு ஆளணி வளங்கள் கிடையாது என சுவிட்சர்லாந்து போலீஸ் அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் போதிய அளவு ஆளணி வளம் கிடையாது என மத்திய காவல்துறை அலுவலகத்தில் பணிப்பாளர் நிக்கோலேட்டா டில்லா வேலா தெரிவித்துள்ளார்.
சுமார் 200 விசாரணையாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாபியா கும்பல்கள் பல்வேறு குற்ற செயல்களை ஈடுபட்டு வருவதாகவும் இதனால பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதிய அளவு போலீஸ் உத்தியோகத்தர்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.