முக்கிய செய்திகள்

மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக சுவிட்சர்லாந்துக்கு வர முயன்ற ஒரு கார், பொலிசாரைக் கண்டதும் தப்ப முயன்றுள்ளது. அந்த காரை ஓட்டிய நபர், பதற்றத்தில், சாலையின் தவறான பகுதியில் காரை ஓட்டி தப்ப முயன்றுள்ளார்.

பொலிசார் அவரைத் துரத்திப்பிடித்து காரை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்துள்ளது. காருக்குள், ஒரு போர்வையின் கீழ் ஒரு பெண்ணின் உடல் மறைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறது.

மனைவியின், அழுகிய பிணத்துடன்,சுவிற்சர்லாந்துக்குள்
மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

அந்த உடல் அழுகும் நிலையிலிருந்ததைக் கண்ட பொலிசார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்கள். விசாரணையில், அந்த நபர் ஸ்பெயினைச் சேர்ந்தவர். சுவிஸ் குடிமகளான தன் மனைவியுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

அவர் தன் நாட்டுக்குச் சென்றபோது இறந்துபோன தன் மனைவியின் உடலுடன் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிவிட விரும்பி காரில் வந்துகொண்டிருக்கும்போதுதான், பொலிசாரைக் கண்டதும் பயந்து திரும்பிச்செல்ல முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிசார், தாங்கள் இந்த சம்பவத்தை சந்தேகத்துக்குரிய சம்பவமாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்கள்.

How To Get More Views on YouTube

Related posts