Swiss headline News

மஞ்சளாக மாறிய வானம் : சுவிட்சர்லாந்தில் ஒரு இயற்கை நிகழ்வின் தாக்கம்

மஞ்சளாக மாறிய வானம்: சுவிட்சர்லாந்தில் ஒரு இயற்கை நிகழ்வின் தாக்கம் சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள்.

பின்னணி

இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.

மேகமூட்டமான வானம் : சகாரா தூசியால் மஞ்சள் நிறமாகும் சுவிட்சர்லாந்து

தெற்கு திசையில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்திலிருந்து பலமான காற்று காரணமாக அடித்துவரப்படும் தூசி, வான்வெளியை மூடுவதால்தான் வானம் மஞ்சளாக மாறுகிறது.

மேகமூட்டமான வானம்

இதுவரை இல்லாத அளவில், இம்முறை 180,000 டன் தூசு காற்றில் அடித்து வரப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் ஏதேனும் தீமை உள்ளதா?

உண்மையில், இதனால் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது. இப்படி பெருமளவில் காற்றில் தூசு அடித்துவரப்படுவதால், வானிலை ஆய்வாளர்கள் சரியான வானிலை எச்சரிக்கை விடுக்கமுடியாத நிலைஉருவாகிறது.

மேலும், அந்த தூசு பனியின்மேல் வந்து அமர்வதால், அது பனிச்சறுக்கு விளையாட்டுக்கு இடையூறாக உள்ளது.

அதே நேரத்தில், அந்த தூசு கனிம வளம் நிறைந்ததாக உள்ளதால், அது நிலத்துக்கு இயற்கை உரமாக அமைகிறது.

உடல் நலத்தைப் பொருத்தவரை, அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button