முக்கிய செய்திகள்

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.!

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.!

உலக மக்கள் தொகையில் சுமார் பாதிப் பேர் பெண்கள். இருப்பினும், கல்வி, வேலை, சுதந்திரம் ஆகிய பல்வேறு அம்சங்களில் பெண்கள் பின்தங்கியே உள்ளனர் அல்லது பின்தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பெண்கள் வாழ்வதற்குச் சிறந்த 10 நாடுகளின் பட்டியலை உலகப் பொருளியல் கருத்தரங்கு வெளியிட்டுள்ளது.

10) சுவிட்ஸர்லந்து

நாடாளுமன்றத்தில் பெண்களின் விகிதம் 33 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அமைச்சர்களில் 43 விழுக்காட்டினர் பெண்கள்.

9) அயர்லந்து

கல்வித் தேர்ச்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி கிட்டத்தட்ட சரிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், 21 ஆண்டுகள் அரசாங்கம் ஒரு பெண்ணின் தலைமையில் வழிநடத்தப்பட்டது.

பெண்கள் வாழ்வதற்கு
பெண்கள் வாழ்வதற்கு

8) லித்துவேனியா

இந்த ஆண்டு, ஆக அதிக முன்னேற்றம் அடைந்துள்ள நாடு.

சிறந்த 10 நாடுகளின் பட்டியலில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.

அமைச்சரவையில் 43 விழுக்காட்டினர் பெண்கள். ஓராண்டுக்கு முன், பெண் யாரும் இல்லை.

7) ருவாண்டா

தொழில்நுட்ப, நிபுணத்துவ வேலைகளில் 40 விழுக்காட்டைப் பெண்கள் வகிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் ஆண்களை விடப் பெண்களே அதிகம்.

6) நமீபியா

ஆண்களை விட ஒரு மடங்கு அதிகமான பெண்கள் உயர் கல்வி படிக்கின்றனர்.

5) சுவீடன்

அமைச்சரவையில் 57 விழுக்காட்டினர் பெண்கள்.

குழந்தைப் பராமரிப்பில், ஆண்களும் பெண்களும் சரிசமமான பங்கேற்பதை ஊக்குவிக்கும் நாடு.

4) நியூஸிலந்து

சமமான சம்பளம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்குச் சம்பளத்துடன் கூடுதல் விடுப்பு அளிக்கும் நடைமுறை அண்மையில் சட்டமாக்கப்பட்டது.

3) நார்வே

அரசாங்கத்தை வழிநடத்துபவர் ஒரு பெண்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 44 விழுக்காட்டினர் பெண்கள். சென்ற ஆண்டு அந்த விகிதம் 41ஆக இருந்தது.

2) ஃபின்லந்து

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 விழுக்காட்டினர் பெண்கள்.

தொழில்நுட்ப, நிபுணத்துவ வேலைகளில் ஆண்களைவிட அதிகமான பெண்களே உள்ளனர்.

1) ஐஸ்லந்து

12வது ஆண்டாக, அது உலகின் ஆகக் குறுகிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், 24 ஆண்டுகள் அரசாங்கம் ஒரு பெண்ணின் தலைமையில் செயல்பட்டுள்ளது.

சமமான சம்பளம் அளிப்பதைச் சட்டமாக்கிய முதல் நாடு அது.

Related posts