Image default
sankt gallenSwiss Local News

புனித வெள்ளி அன்று பார்பிக்யூ செய்யும் போது வெடித்த அடுப்பு.!! CHF 20,000 சேதம்..!

சென்ட் காலன் மாநிலத்தில் புனித வெள்ளி அன்று இரண்டு பேர் ஒன்றாக பார்பிக்யூ செய்தனர். இதன்போது தீடீரென மாலை 6:30 மணியளவில் ஒரு தீப்பிழம்பு வெடித்தது, அது வீட்டின் முகப்பில் பரவி சேதமடைந்தது.

மேலும், மொட்டை மாடியின் கண்ணாடி முன்புறம் முழுவதும் சேதமடைந்துள்ளதாக St.Gallen கன்டோனல் போலீஸ் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் வீட்டின் தரையையும் கூரையையும் கூட விட்டுவைக்கவில்லை.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரும் காயமின்றி இருந்தனர். சொத்து சேதம் சுமார் 20,000 பிராங்குகள்.

தீ ஏன் ஏற்பட்டது என்று St.Gallen canton காவல்துறையின் தடயவியல் திறன் மையம் விசாரித்து வருகிறது.

csm 220416 Grill2 b1aabf0412

kanton news in Tamil
kanton news in Tamil
Advertisements

Related posts

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்து .! Appenzell Canton இல் சம்பவம்.!

admin

சுவிட்ச்லாந்தின் தென்பகுதியில் பாரிய அளவில் ஆலங்கட்டி மழை

admin

Schäniserstrasse in Bilten பகுதியில் இடம்பெற்ற விபத்து வாகனம் பலத்த சேதம்.!!

admin

Leave a Comment