Image default
Swiss headline News

புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட்டம்: அவர் யார் தெரியுமா?

புடினுடைய இரகசிய காதலி சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரைத் தொடர்ந்து, புடினுடைய நீண்ட நாள் இரகசிய காதலியான Alina Kabaeva (39), புடினுக்கும் அவருக்கும் பிறந்த நான்கு பிள்ளைகளுடன், சுவிட்சர்லாந்திலுள்ள Lugano ஏரியின் அருகில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகைக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

புடின் மற்றும் Alinaவின் பிள்ளைகள் நான்கு பேருக்கும் சுவிஸ் குடியுரிமை உள்ளதாம். தம்பதியருக்கு ஏழு வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளும், இரண்டு பையன்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த இரட்டைக் குழந்தைகள் இருவருமே Lugano நகரில்தான் பிறந்தார்களாம்.

2018இல், எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அதில் மற்றவர்கள் நுழைவதை நான் அனுமதிப்பதில்லை. அதை மதிக்கவேண்டும், மற்றவர்கள் தங்கள் மூக்கை எங்கள் வாழ்வில் நுழைக்க விரும்புவதை நான் விரும்பவில்லை என்று புடின் கூறியதாக கூறப்படுகிறது.

22 623033ef24b24

அத்துடன், புடினுக்கு விமான பணிப்பெண்ணான Lyudmila Shkrebneva என்ற மனைவி இருந்ததாகவும், அவரை புடின் விவாகரத்து செய்துவிட்டதாகவும், அவருக்கு இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் Alinaவுடன் இருப்பதாகவும் ரஷ்ய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட, பிறகு அந்த பத்திரிகையே மூடப்பட்டுவிட்டதாம்.

புடினுடைய தற்போதைய காதலியான Alina, தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் தடகள வீராங்கனை ஆவார். 14 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களும், 21 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்களும் பெற்றவர் அவர். புடினுக்கும் அவருக்கும் இடையிலான உறவு வளரத்தொடங்கியதும், அவர் பொது வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இப்போது அவர் முற்றிலுமாக தன்னை மறைத்துக்கொண்டு வாழ்வதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், இத்தாலி எல்லையில் Luganoவில் வாழும் ஒரு நபர், பெருந்தொற்றுக்கு முன் இங்கு புடினுடைய இரகசிய காதாலி வாழ்வதாக அடிக்கடி பேச்சு அடிபடும். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலர் இங்கு வாழ்கிறார்கள். ஆனால், அவர்களைக் குறித்து யாரும் பேசுவதில்லை, எல்லாம் இரகசியமாவே இருக்கின்றன என்கிறார்.

Advertisements

Related posts

சுவிஸில் சொந்த வீடு வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!!

admin

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் உணவுப்பொருள் ஒன்றில் கிருமிகள்.!!

admin

சுவிற்சர்லாந்தில் அதிக குற்றம் செய்பவர்கள் எந்த நாட்டவர் தெரியுமா.?

admin

Leave a Comment