பிரான்ஸில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பல லட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகை பிரான்ஸில் வாகனம் ஒன்றில் இருந்து தவறி விழுந்த நகைகளை திருடிச் சென்ற நால்வர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று இச்சம்பவம் கடந்த வாரம் நீஸ் (Nice) நகரில் இடம்பெற்றுள்ளது.
பணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்று Boulevard du Mercantour வீதியில் பயணித்தது. பகல் 3.30 மணி அளவில் குறித்த வாகனத்தில் இருந்து பொதி ஒன்று தவறுதலாக கீழே விழுந்துள்ளது.

குறித்த பொதிக்குள் 170,000 யூரோக்கள் பெறுமதியுள்ள வைர நகைகள் இருந்துள்ளன.
பொதி விழுந்ததை அறியாத கவச வாகனத்தின் சாரதி தொடர்ந்து பயணிக்க, பின்னால் வந்த மகிழுந்து ஒன்றில் இருந்த இருவர் இதனை கவனித்துவிட்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி குறித்த பொதியை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த வாகனத்தை முதலில் கவச வாகனத்தில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் நடந்த சம்பவங்களை அறிந்துகொண்ட பொலிஸார் அளவில் தப்பி ஓடிய இரு சாரதிகளையும் கைது செய்தனர். 32 மற்றும் 35 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவச வாகனத்தில் இருந்த இரு அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.