பிரான்ஸில் ரயிலில் குழந்தை பிரசவித்த பெண் – 80 நிமிடங்கள் காத்திருந்த பயணிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நெடுந்தூர ரயில் ஒன்றில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். பாரிசில் இருந்து Strasbourg நகருக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரயிலை உடனடியாக அருகில் எங்கேயும் நிறுத்த முடியாமல் போக, மேலும் சில நிமிடங்கள் பயணித்து Lorraine நகருக்குச் சென்று அங்குள்ள தொடருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டது.
பின்னர் குறித்த பெண்ணுக்கு தொடருந்து ஊழியர்கள் உதவியுடன் குறித்த பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் தீயணைப்பு படையினர் தாய், சேய் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
80 நிமிடங்கள் அப்பெண்ணுக்காக ரயில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் மக்கள் அதுவரையில் பொறுமையாக காத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.