பாரிஸில் 76வது இந்திய சுதந்திர தின நிகழ்வுகள். பாரிஸில் இந்திய தூதரகம் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 9மணிஅளவில் பிரான்ஸ் இந்திய தூதுவர் திரு.H.E.Jawed Ashraf அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
அதில் திரளான சமூக சேவை அமைப்புக்களை சேர்ந்த இந்தியர்கள், பாரிஸ் நகரில் உள்ள முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நேற்று அதிகாலையில் இருந்தே பல் வேறு இந்தியர்கள் அவர்களின் கலாச்சார உடையணிந்து பிரான் ஈபிள் கோபுரம் அருகில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ் கலாச்சாரம் சங்கம்,, மேலூன் நகரில் காவல்துறையின் அனுமதி பெற்று பேருந்து நிலையம் அருகில் தலைவர் பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்து பிரஞ்சு, ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக துணை தலைவர் செல்வராசு அனைவரையும் வரவேற்றிட நிகழ்ச்சியில் நிருவாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் பங்கேற்றார்கள், செயலாளர் சூரியா நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் மணிவேல் வெங்கடேசன் திருமதி. தில்லை சரிதா செய்து இருந்தார்கள்.