முக்கிய செய்திகள்

பாய்ந்து வந்த ரயில்… பெண்ணை சட்டென்று தள்ளிவிட்ட நபர்: சுவிஸில் பகீர் கிளப்பிய சம்பவம்

பாய்ந்து வந்த ரயில்

சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன்பு பெண் ஒருவரை இளைஞர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணிக்குப் பிறகு நடந்த இச்சம்பவத்தில், ரயில் சாரதி சமயோசிதமாக செயல்பட்டு, அவசரமாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதுடன், சிறு காயங்களுடன் 40 வயதான அந்த பெண்மணி தப்பியுள்ளார்.

பாய்ந்து வந்த ரயில்

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த சூரிச் மண்டல பொலிசார், எரித்திரியா நாட்டவரான அந்த 27 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் எந்த அறிமுகமும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என தெரிய வந்துள்ளது.

Source;- lankasri.com

Related posts