முக்கிய செய்திகள்

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

Schwyz

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்று பல ஆண்டுகளாக சம்பாதித்த முன்னாள் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் Schwyz மண்டலத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டல பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த 58 வயது முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து பெடரல் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மட்டுமின்றி, 30 பிராங்குகள் வீதம் 180 நாட்களுக்கு அபராதம் செலுத்தவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக
பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

தற்போது தண்டனை பெற்றுள்ள அந்த நபர் பொலிஸ் துறையை சாராதவர் என கூறப்படுகிறது. போலியான ஆவணங்களை தயாரித்து ஆயுதங்கள் கொள்முதல் செய்துள்ளதுடன், அதை தனிப்பட்டமுறையில் விற்பனையும் செய்து வந்துள்ளார்.

மொத்த 9 ஆண்டுகள் அவர் இந்த முறைகேடில் ஈடுபட்டதும், மண்டல பொலிஸ் துறைக்கு 181,600 பிராங்குகள் அளவுக்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Thulasi Thirumana Seivai

Source:- Lankasri

Related posts